fbpx

குழந்தையை தூங்க வைக்க தாய் செய்த காரியம் !! – கடைசியாக உயிரிழந்த பரிதாபம் !! பெற்றோர்களே இதை செய்யாதீங்க !!

by

சில நேரங்களில் நாம் செய்யும் சிறிய தவறுகள் நமக்கு பெரிய விபரீதத்தை ஏற்படுத்திவிடும்.அதுபோல அந்த சிறிய தவறுக்கு நாம் கொடுக்கும் விலையானது மிகப்பெரியதாக இருக்கும்.குழந்தைகளை பொறுத்தவரை நாம் பூ போல பார்த்துக்கொள்ள வேண்டும்.ஆதலால் தான் குழந்தை பராமரிப்பு என்பது நன்கு பழக்கப்பட்டவர்களாலே செய்யப்படுகிறது. அப்படியும் சில நேரங்களில் சில விஷயங்களை தவறவிடுவதால் நாமும் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகிறோம்.இந்த பதிவில் நாம் பார்க்கும் சம்பவம் கூட அதுபோல பெற்ற தாயாரால் செய்யப்பட்ட சிறிய தவறுக்கு பலியாக அவரது குழந்தையின் உயிரே பறிக்கப்பட்டு விட்டது.

இந்திய மாநிலமான தமிழகத்தில் மதுரவாயலைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பவானி. இவர்களுக்கு லோகேஸ்வரி(4) என்ற மகளும், பிரகதீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் இருந்தது.திருமணமாகி நல்ல முறையில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். 5 நாட்களுக்கு முன், சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அழுதுள்ளது. இதையடுத்து லோகேஸ்வரி குழந்தையை தூங்கவைப்பதற்காக தொட்டிலை வேகமாக ஆட்டியுள்ளார்.அப்போது அருகிலிருந்த கட்டில் மீது குழந்தையின் தலை மோதியிருக்கிறது. இதனை அசால்டாக விட்டுள்ளார் தாய் லோகேஸ்வரி.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தையின் தலை வீங்கி இருந்தது கண்டு பெற்றோர்கள் பதறியடித்து, குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வரையிலே அவர்களுக்கு குழந்தைக்கு என்ன ஆனது எப்படி ஆனது என்பது தெரியவில்லை.மருத்துவமனையில் அனுமதித்த பின்புதான் இதுபோன்று சம்பவம் நடந்துள்ளது என பெற்றோர்களே கண்டுபிடித்துள்ளனர். பின்னர் பிரகதீஸ்வரனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பிரகதீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தால் குழந்தையின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.குழந்தைகளை நாம் எப்போதும் பாதுகாப்பான முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் குழந்தைகளை கவனிக்கும்போதும் மிகவும் பாதுகாப்புடன் கவனித்துகொள்ள்ள வேண்டும்.