fbpx

அஜித் பெயர்க்கு பெருமை சேர்த்த அஜித் ரசிகர்கள் !! என்ன இருந்தாலும் இப்படியா

by

அஜித் என்ற ஒற்றை பெயருக்காக ஒரு கூட்டமே இருப்பதை எல்லோரும் அறிவர். அவர்களின் மூச்சுக்கூட தலயின் பெயரை தான் சொல்லும்.

இவர்களுக்கும் அஜித்திற்கும் சினிமாவையும் தாண்டி பல விஷயங்களில் ஒரு பிணைப்பு உள்ளது. அதனால் என்னவோ அஜித்திற்காக இவர்கள் செய்யும் செயல்கள் பலமுறை வியப்படைய வைத்துள்ளது.

அதிலும் கடந்த சில வருடங்களாக இவர்களின் செயல், ரசிகர் என்றாலும் இப்படியெல்லாமா செய்வது என்றுதான் நினைக்க வைக்கிறது. அதுபோன்ற நம்பவே முடியாத நிகழ்வாகத்தான், ரசிகர் ஒருவர் தன்னுடைய ஆண் குழந்தைக்கு தல அஜித் என பெயர் வைத்துள்ளார்.

இது அஜித் ரசிகர்களையும் தாண்டி பல ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தல அஜித் ரொம்பவே விரும்புன விஷயம் விசுவாசத்துல இருக்கு

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் சூட்டிங், கடந்த 3 வாரங்களாக இடைவிடமால் நடந்து வருகிறது. இப்போது எடுக்கப்படும் காட்சியில் அஜித் வெள்ளை சட்டை மற்றும் அணிந்து சால்ட் அன்டு பெப்பர் தோற்றத்தில் காணப்படுகிறார்.

கூடுதல் தகவல் என்னவென்றால், விசுவாசம் படத்தில் புல்லட் பைக்கில் சீரிப்பாயந்து செல்லும் பல காட்சிகள் உள்ளதாம். அதிவேகமாக பைக்கில் செல்லும் சீன்களில் அஜித் டபுள் எனர்ஜியுடன் நடித்திருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது. ஏனெனில் பாக்ஸ் ஆபிஸ் கிங்கான தல அஜித்துக்கு பைக் ரேஸ் மிகவும் பிடித்த விஷயம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே… விசுவாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்குகிறார்.