fbpx

என் மகளை யாரும் என் மகளை கேலி பண்ணாதீங்க..! – இந்த அழகான தமிழ் பெண்ணின், தாயின் குமுறல் ஏன் தெரியுமா?

by

தமிழகத்தில் கபடியில் கில்லாடியாக மாறி வரும் மாணவியை, அவரது கல்லூரி மாணவர்கள் முன்னால் வந்தே கிண்டல் செய்வதால், அவளை கிண்டால் செய்யாதீங்க கண்ணுங்களா என்று மாணவியின் தாயார் கூறியுள்ளார்.கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷினி. இவருக்கும் காதும் கேட்காது, வாயும் பேச முடியாது, இருப்பினும் தற்போது தன்னுடைய விடா முயற்சியால், கபடியில் நேஷனல் லெவலில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இது குறித்து தர்ஷினியின் அம்மா கூறுகையில், நான் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். என் கணவர் கூலி வேலை செய்கிறார். எங்களுக்கு 3 பிள்ளைகள், 2 பையன். 1 பொண்ணு. என்னுடைய 2-வது மகனுக்குக் கொஞ்சம் காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. அவனைப் பள்ளியில சேர்த்ததும் மெது மெதுவாப் பேச ஆரம்பிச்சிட்டான். இப்போ இன்ஜினீயரிங் படிக்கிறான். முன்னாடி இருந்ததை விட இப்போ ஓரளவுக்குப் பேச ஆரம்பிச்சிட்டான். காது மட்டும் கொஞ்சம் கேட்காது.

எங்கள் வீட்டு கடைசி பொண்ணு தான் தர்ஷிணி, அவள் தேவதை, பிறந்த போது, அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குமா என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை, அதன் பின் வளர, வளர சரியாகிவிடும் என்று நினைத்தோம், ஆனால் இல்லை. என் மகனுக்கும் இந்த பிரச்சனை இருந்த போது, பள்ளியில் சேர்த்தோம், அது கொஞ்சம், கொஞ்சமாக சரியானதால், இவளையும் பள்ளியில் சேர்த்தோம். நன்றாக படிப்பாள், ஒரு முறை 6-ஆம் வகுப்பு முதல் மாணவியாக வந்தாள். அப்போது அவள் பாப்பா பெயர், பாப்பா பெயர்’ன்னு சொன்னா. எனக்கு ஒண்ணும் புரியல.

அதன் பின் அவளோட பள்ளிக்கு சென்று அவளோட வகுப்பறையில் போர்டை பார்த்த பின்பு தான் தெரிந்தது. ஒருபக்கம் பொண்ணு நல்லாப் படிக்கிறான்னு சந்தோஷம் இருந்தாலும், மத்த பசங்க மாதிரி பேசலையேன்னு அழுவேன்.அப்போ எல்லாம் அவள் ‘ம்மா பேசுவேன், அழாதானு சொல்லுவாள். இதனால் அவள் இவ்வளவு உறுதியாக இருக்கும் போது, நாம் ஏன் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நானும் அதன் பின் தைரியமாக இருந்தேன்.தர்சினியையூம், அண்ணனையும் யோக பள்ளியில் சேர்த்தேன். அப்போ தான் கபடி கத்துக்கிற வாய்ப்பு கிடைத்தது. என் பொண்ணுக்கு ரொம்பப் பிடிச்சுப் போக ஆரம்பிச்சது.முதலில் நான் அவள் கூட தனியாக சென்றேன், இப்போ அவள் எல்லா இடத்திற்கு தனியாக தைரியமாக போயிட்டு வருகிறாள். இப்போ ஹிந்துஸ்தான் கல்லூரியில் பி.காம் முதல் ஆண்டு படிக்கிறாள்.

படித்து கொண்டே, டிச்சுகிட்டே ஸ்போர்ட்ஸ்ல கலந்துக்கிறா. இப்ப நேஷனல் லெவல்ல நடக்குற கபடி போட்டிக்குத் தயாராகிட்டு இருக்கா. அவளுக்கு உதவுறது எல்லாம் அவளோட படிக்கிற ரம்யாங்கிற பொண்ணுதான், அந்த பொண்ணு தான் தினமும் என் மகளை கூப்பிட்டு போவா, மறுபடியும் வீட்டுக்கு வந்து விட்டுட்டுப் போவா.ஆனால் என் பொண்ணுக்கு ஒரே ஒரு வருத்தம் இருக்கு, அது என்னா என்றால், அவளுடைய குறையை மத்த பசங்க கேலி பண்றாங்க, அவளுக்கு பின்னாடி பண்ணா கூட தெரியாது, முன்னாடி பண்றதால மிகவும் வருத்தப்படுகிறாள். இதனாலே அவள் காது கேட்கிற மெஷினை கழட்டி வைத்துவிடுவாள். என் பொண்ணுக்கு எல்லாரையும் நேசிக்க மட்டும்தான் தெரியும் கண்ணுங்களா அவளைக் கேலி பண்ணணும்னா தயவு செய்ஞ்சு அவ பின்னாடி கேலி பண்ணுங்க ப்ளீஸ் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.