fbpx

என்னை விட்டு விடுங்கள் என்று கதறிய மாற்றுத்திறனாளிப் பெண்… இரக்கமற்ற நால்வர் செய்த வேலை!

by

மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை 6 மணிநேரமாக துன்புறுத்தி 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kayla Kendrigan என்ற 19 வயது இளம்பெண் பிறக்கும்போதே இடது கை இல்லாமல் பிறந்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போதுஅந்த வழியே வேகமாக அங்கு வந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர், அவரை மிரட்டி காரில் கடத்தி கொண்டு, 60 கி.மீ தூரம் வரை கொண்டு சென்று பின்பு குறித்த பெண்ணை அடித்து துன்புறுத்தி, தீயில் தள்ளி சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்கள்.

கதறிய அழுத மாற்றுத் திறனாளி
மேலும் அவர் வலி தாங்க முடியாமல் குறித்த மாற்றுத் திறனாளிப் பெண் என்னை விட்டு விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார். ஆனால் அந்த இரக்கமற்றவர்கள் 6 மணி நேரமாக Kayla வை கொடுமைப்படுத்தி 65 அடி உயரமுள்ள பாலத்திலிருந்து கீழே உள்ள நதியில் தூக்கி எறிந்துள்ளனர்.

ஒரு கையை மட்டுமே வைத்துக் கொண்டு அந்த பெண் நீந்தி கரையை வந்தடைந்துள்ளார்.

பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் Kayla வை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகள்
இந்த சம்பவத்தில் Kayla-வின் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தையல் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கொடூரக் குற்றவாளிகளான Matthew Leuthwaite வயது (22) மற்றும் Brooke Brown வயது(19) ஆகியோரை பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலும் நவம்பர் 23 இல் மீண்டும் நீதிமன்றம் முன் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 17 மற்றும் 16 வயதுள்ள சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதில் ஒருவர் Kayla வின் முன்னாள் காதலர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.