fbpx

Exclusive: இவர் தான் டைட்டில் வின்னர் அடித்து கூறும் சினேகன் :பிக் பாஸிடம் மக்கள் ஓட்டெல்லாம் செல்லாது

by

சென்னை: பிக் பாஸில் யார் வெற்றி பெறுவார் என்பதை எண்டோமோல் நிறுவனம் தான் முடிவு செய்யும் என கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. செம்படம்பர் 30ம் தேதி நடைபெறும் கிராண்ட் பினாலேயில் பிக் பாஸ் பட்டத்தை தட்டிச் செல்லப்போவது யார் என்பது தெரிவிந்துவிடும்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேருக்கு இடையே தான் தற்போது பலத்த போட்டி நிலவி வருகிறது.

மக்களின் பெரும்பான்மையான ஆதரவு ரித்விகாவுக்கு தான் இருக்கிறது. அவருக்கு அடுத்தப்படியாக தான் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர். ரித்விகாவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வரும் சூழலில், கடந்த சீசன் போட்டியாளரான சினேகனை சந்தித்து பேசினோம்.

ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டி:

நடிப்பு
நடிக்கிறார்கள்
பிக் பாஸ் முதல் சீசனில் முடிந்தவரை உண்மையாக இருக்க முயற்சி செய்தார்கள். இப்போது சீசன் இரண்டில் முடிந்தவரை நடிக்க வேண்டுமென முடிவு செய்து நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் முடிவு
பிக் பாஸ் தான் முடிவு செய்வார்

இப்போது கடைசி வாரத்தில் சீசன் இரண்டு இருக்கிறது. யார் ஜெயிக்க வேண்டும் என்பதை எண்டோமோல் தான் முடிவு செய்யும். மக்கள் ஓட்டு எல்லாம் டைட்டில் வின்னரை முடிவு செய்யாது. ஒருவேளை ரித்விக்காவுக்கு டைட்டில் கிடைத்தால் பிக் பாஸ் நியாயமாக நடக்க தொடங்கியிருக்கிறார் என சந்தோஷப்படலாம்.

திட்டமிட்ட சதி
யாஷிகாவுக்கு நடந்தது திட்டமிட்ட சதி

யாஷிகா கடைசி வரை, அதாவது 100 நாட்கள் இருந்திருக்க வேண்டும். நான் பார்த்தவரை அவர் மிகவும் ஸ்போர்ட்டிவானவர். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிக்க எனக்கு தகுதி கிடையாது. ஆனால் யாஷிகாவையும், சென்ட்ராயனையும் வெளியேற்றியதை திட்டமிட்ட சதியாக தான் நான் பார்க்கிறேன்.

தீர்ப்பு
எழுதப்பட்ட தீர்ப்பு

பிக் பாஸ் சீசன் 2வின் வெற்றியாளர் ஐஸ்வர்யாதான் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு. ஒருவேளை ரித்விகாவுக்கு கொடுத்தால், அவர்கள் மக்களை மதித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்” என இவ்வாறு கவிஞர் சினேகன் கூறினார்.

என்னை மாதிரி இருக்காதே டைட்டிலை வெல்ல ரித்விகாவுக்கு சினேகன் சொன்ன ‘சீக்ரெட்’

சென்னை : பிக் பாஸ் வீட்டில் தன்னைப் போல் வாழாமல், நன்றாக விளையாடும்படி ரித்விகாவிற்கு அறிவுரை கூறியதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் முதல் சீசனில் வெற்றியாளராக வருவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் கவிஞர் சினேகன். அனைத்து போட்டியாளர்களிடமும் நல்ல அபிப்ராயம் பெற்றிருந்த அவருக்கு, இறுதியில் இரண்டாம் இடம் தான் கிடைத்தது.

காதல் சர்ச்சைகளில் சிக்கிய ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். ரித்விகா:
முதலிடத்தில் ரித்விகா:
இதேபோல் இம்முறை ரித்விகா தான் மக்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். ஆனால், தொடர்ந்து பிக் பாஸால் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு வருகிறார். எனவே, கடைசி நேரத்தில் பிக் பாஸ் டைட்டில் ஐஸ்வர்யாவுக்கு தான் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

சீனியர் போட்டியாளர்கள்:
முதல் சீசன் போட்டியாளர்கள்:

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல் சீசன் போட்டியாளர்களான சினேகன், வையாபுரி, ஆரவ், காயத்ரி, ஆரத்தி மற்றும் சுஜா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாகச் சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள சீசன் 2 போட்டியாளர்களுக்கு அவர்கள் சில அறிவுரைகள் வழங்கினர்.

சாதுர்யம்
சாதுர்யம் குறைவு

அதன்படி, ரித்விகாவிற்கு தான் வழங்கிய அறிவுரை குறித்து ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் கவிஞர் சினேகன். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ரித்விக்காவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தாலும்கூட அவரால் ஜெயிக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களுக்கு நல்லவர்கள் தேவையில்லை. சாதூர்யமாக விளையாடுபவர்கள் மட்டும் தான் அவர்களுக்கு தேவை. ரித்விகாவுக்கு சாதூர்யம் கொஞ்சம் குறைவு.

உண்மை
உண்மையாக இருந்தால் ஜெயிக்க முடியாது

நாளை நடக்கப் போகிற திரையுலக மற்றும் விளம்பர வித்தையில் ரித்விகாவால் நீச்சல் அடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. நம்மை போன்ற ஆட்கள் மிகவும் உண்மையாக இருந்தால் ஜெயிக்க முடியாது என நான் அவரிடம் சொன்னேன். அந்த வீட்டில் நான் வாழ்ந்துவிட்டு வந்தேன். நீயாவது விளையாடிவிட்டு வா என ரித்விகாவுக்கு நான் அறிவுரை கூறினேன்” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.