fbpx

ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து விடுபடுவது எப்படி?

by

பெண்களைப் போன்றே ஆண்களும் வெளியே சொல்ல முடியாத அளவிலான சில அந்தரங்க பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் ஒன்று ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல். இந்த பிரச்சனையைப் பல ஆண்கள் மருத்துவரிடம் சொல்லக்கூட தயங்குவார்கள். ஆனால் இதை அப்படியே விட்டுவிடக்கூடாது. உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

ஒரு முக்கியமான விஷயத்தை ஆண்கள் மனதில் கொள்ள வேண்டும். ஆண்குறியும் உடலின் இதர உறுப்புக்களைப் போன்றது மற்றும் ஆண்குறியின் சரும பகுதி உடலின் இதர சருமப் பகுதியைப் போன்றது தான். உடலின் முழங்கால், முழங்கை, கைகள் மற்றும் முகத்தைப் போன்றே, ஆண்குறியின் தோல் பகுதியும் வறட்சி அடைவதோடு, வெடிப்புக்கள் மற்றும் அரிப்பும் ஏற்படும்.
எனவே ஆண்களே! உங்களின் ஆண்குறியில் திடீரென்று அதிக வறட்சி மற்றும் அழற்சி ஏற்பட்டிருப்பதை அறிந்தால், உடனே மனம் தளர்ந்துவிடாமல், பாலியல் தொற்றுகள் அல்லது புற்றுநோய் ஏற்பட்டுள்ளதோ என்று அச்சம் கொள்ளாமல், எந்த காரணங்களுக்காக எல்லாம் ஆண்குறியில் அழற்சி அல்லது அரிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த கட்டுரையில் ஒரு ஆணுக்கு எந்த காரணத்தினால் ஆண்குறியில் அரிப்பு அல்லது அழற்சி ஏற்படலாம் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அந்த தவறுகளைத் திருத்திக் கொண்டாலே போதும், ஆண்குறியில் உள்ள அழற்சியில் இருந்து விடுபடலாம்.

ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து விடுபடுவது எப்படி?
காரணம் 1 : விருப்பமான சோப்பு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பமான சோப்பு இருக்கும். ஆனால் நீங்கள் நல்ல நறுமணம் உள்ள சோப்பை பயன்படுத்தினால், அந்த சோப்பு சில சமயங்களில் சருமத்தில் அழற்சியை உண்டாக்கலாம். ஏனெனில் சோப்புகளில் நல்ல நறுமணத்திற்காக சேர்க்கப்படும் நறுமணப் பொருட்கள், சருமத்தில் அரிப்பை உண்டாக்கக்கூடும். முக்கியமாக ஆண்குறியின் சருமம் மிகவும் சென்சிடிவ் என்பதால், இப்பகுதியில் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே நீங்கள் ஏதேனும் நல்ல நறுமணம் கொண்ட சோப்பைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் வறட்சியை கண்டால் அல்லது ஆண்குறியில் வறட்சியைக் கண்டால், உடனே அந்த சோப்பை மாற்றுங்கள்.

காரணம் 2 : காண்டம்

பாதுகாப்பான உடலுறவின் போது பயன்படுத்தும் ஓர் பொருள் தான் காண்டம். பொதுவாக ஆண்குறி சென்சிடிவ்வான பகுதி. சிலரது ஆண்குறி மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும். இத்தகையவர்கள் காண்டமைப் பயன்படுத்தும் போது, காண்டம் தயாரிக்கப் பயன்படுத்திய மெட்டீரியல் ஆண்குறியின் தோல் பகுதியில் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். ஒருவேளை நீங்கள் லாடெக்ஸ் காண்டம் பயன்படுத்தும் போது, லாடெக்ஸ் அழற்சி உங்களுக்கு இருந்தால், ஆண்குறி அரிப்புடனும், அதன் தோல் பகுதியில் சிறு சிறு சிவப்பு நிற புள்ளிகளையும் காணக்கூடும். இதைத் தவிர்க்க லாடெக்ஸ் அல்லாத காண்டமை பயன்படுத்துங்கள்.

காரணம் 3 : அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காணுதல்

சுய இன்பம் காண்பது நல்லதாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால் எந்த ஒரு நல்ல செயலும் கெடுதலைத் தான் கொடுக்கும். அதாவது சுய இன்பத்தை ஒருவர் ஒரு நாளைக்கு 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்தால், ஆண்குறியின் தோல் பாதிக்கப்படும். அதுவும் நீண்ட நேரம் சுய இன்பத்தைக் காணும் போது, ஆண்குறியின் தோல் இழுக்கப்படுவதால், சில சமயங்களில் அது மிகவும் வறட்சி அடைந்து, சிவந்து போகும். எனவே இதைத் தவிர்க்க வேண்டுமானால், அடிக்கடி சுய இன்பம் காண்பதைத் தவிர்த்திடுங்கள்.

காரணம் 4 : சரும பிரச்சனைகளான சொரியாசிஸ் அல்லது எக்ஸிமா

சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகள் உடலின் அந்தரங்க பகுதிகளில் ஏற்படாது என்று நீங்கள் நினைத்திருந்தால், அது உங்களது தவறு. இவைகள் சரும பிரச்சனைகள் என்பதால், இவை உடலின் வெளிப்புறப் பகுதிகளில் தான் ஏற்படும் என்பதில்லை, ஆண்குறியையும், அதைச் சுற்றியுள்ள பகுதியையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் இந்த சரும பிரச்சனையானது ஆண்குறியில் ஏற்பட்டால், அதன் தோலின் மடிப்புள்ள பகுதியில் கடுமையான அரிப்பை உண்டாக்குவதோடு, உடலின் இதர மடிப்பு உள்ள பகுதிகளான முழங்கை மற்றும் முழங்கால் போன்ற பகுதிகளிலும் தாங்க முடியாத அளவிலான அரிப்பை உண்டாக்கும்.

காரணம் 5 : இறுக்கமான உள்ளாடை அணிவது

அந்தரங்க உறுப்பான ஆண்குறியை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது கடினம். குறிப்பாக கோடைக்காலத்தில் அந்தரங்க பகுதியை ஆண்கள் சுத்தமாக, ஈரப்பசையின்றி வைத்துக் கொள்வது முடியாத ஒன்றாகவே இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் அதிகமாக வியர்ப்பதனால், உள்ளாடை முதல் உடுத்தும் உடை வரை அனைத்துமே ஈரமாக இருக்கும். இப்படி அந்தரங்க பகுதி ஈரப்பசையுடன் இருந்தால், அப்பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சி அதிகரித்து, துர்நாற்றம், அரிப்பு மற்றும் சில வகையான சரும தொற்றுக்களின் அபாயமும் அதிகரிக்கும்.

நீங்கள் ஆணுறுப்பில் அதிகப்படியான அரிப்பை சந்தித்தால், உடுத்தும் உள்ளாடையை இறுக்கமாக அணியாமல், தளர்வாக இருக்குமாறான உள்ளாடையை அணியுங்கள். மேலும் இரவு நேரத்தில் உள்ளாடை அணியாமல் காற்றோட்டமாக அப்பகுதியை வைத்துக் கொள்ளுங்கள்.

காரணம் 6 : பாலியல் தொற்றுகள்

பெரும்பாலான நேரங்களில் ஆண்குறி சிவந்தோ, அரிப்புடனோ இருந்தால், அதற்கு அதிகமாக அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எப்போது ஆண்குறியின் தோலில் வெடிப்புக்கள், இரத்தக்கசிவு அல்லது வலியை உணர்கிறீர்களோ, அது பாலியல் நோய்களுள் ஒன்றான ஜெனிடல் ஹெர்பீஸ் நோய்க்கான அறிகுறியாகும். இந்த வகை நோயினால் உண்டாகும் புண்கள் விரை விதை, தொடைகள், பிட்டம் அல்லது மலப்புழையில் ஏற்படும். ஆண்குறியில் புண்கள் உண்டாகி, அது கடுமையான வலியையை உண்டாக்கினால், பதற்றம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஜெனிடல் ஹெர்பீஸ் சரிசெய்யக் கூடியது. ஆனால், இந்த பிரச்சனையை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுங்கள். இதனால் ஜெனிடர் ஹெர்பீஸ் விரைவிலும், பாதுகாப்பாகவும் குணமாகும்.