fbpx

சாலையில் குழந்தைகளுடன் பள்ளி வேன்! டிரைவரின் மோசமான செயல்: கமெராவில் சிக்கிய காட்சி

by

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் வேன் ஓட்டுனர் ஒருவர், சாலையில் வேனை நிறுத்திவிட்டு மது அருந்த சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

லக்னோவில் சரஸ்வதி கியான் மந்திர் என்ற பள்ளிக்கூடத்தின் வேன் டிரைவர் ஒருவர் பிற்பகலில் பள்ளி முடிந்தவுடன் குழந்தைகளை வேனில் அமர்த்திக் கொண்டு, வேனை எடுத்து சென்றுள்ளார்..

அப்போது வரும் வழியில் தெருவோரத்தில் வேனை நியூட்ரல் கியரில் நிறுத்திவிட்டு, அருகில் இருக்கும் ஒயின் ஷாப்பிற்கு சென்றுள்ளார்.

இந்த சாலையில் வழியே சென்ற நபர், குழந்தைகளுடன் பள்ளி வேன் தனியாக நிற்கிறதே என்று உள்ளே இருக்கும் குழந்தைகளிடம் சென்று டிரைவர் எங்கே என்று கேட்டுள்ளார்.

உள்ளே இருக்கும் குழந்தை டிரைவர் சென்ற சாலையை காட்டியுள்ளது. அதன் பின் அவர் உடனடியாக அங்கிருக்கும் ஒயின் ஷாப்பிற்கு சென்று, குழந்தைகள் இருக்கிற வேனை நியூட்ரலில் போட்டுவிட்டு வந்த டிரைவர் யார் என கத்தியுள்ளார்.

இதைக் கேட்ட உள்ளே இருந்த டிரைவர் பதறிபோய் உடனடியாக வேன் இருக்கும் பகுதியைக் நோக்கி ஓடுகிறார்.

மேலும் அந்த வீடியோவில் வேனின் உள்ளே இருக்கும் சிறுவன் கியரையே பார்த்துக் கொண்டிருக்கிறான். தெரியாமல் கூட அவன் ஸ்டார்ட் செய்துவிட்டால், உள்ளே இருக்கும் குழந்தைகளின் நிலை என்ன ஆகும்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.