fbpx

நடுரோட்டில் இருக்கிறேன்…. என்னை அடித்து உதைத்தார்கள்: நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார்

by

மதுரவாயிலில் அமைந்துள்ள தனது மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருக்கும் மகள் வனிதா அங்கிருந்து வெளியேற மறுக்கிறார் என நடிகர் விஜயகுமார் நேற்று பொலிசில் புகார் அளித்திருந்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில், பொலிசார் வனிதாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

எனது தந்தை என்னை காரணமின்றி வீட்டை விட்டு வெளியேற்றினார். இதற்கு சகோதரர் அருண் விஜய்யும் உடந்தையாக இருந்தார். எனது தந்தையின் புகாரின் பேரில் என்னை அழைத்து சென்ற பொலிசார் என்னை அடித்து துன்புறுத்தினர்.

எனது தந்தை அராஜகம் செய்கிறார். அடி ஆட்களை கூட்டி வந்து மிரட்டுகிறார். சொந்த பெண்ணை நடுரோட்டில் நிற்கவைத்து, பொலிசில் வைத்து என்னை அடித்துள்ளார். தற்போது நான் எங்குபோவது என்று தெரியவில்லை.

நான் எங்க அம்மாவின் வீட்டில் இருந்துகொள்கிறேன், எனக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். நான் எங்குபோவேன். மதுரவாயில் பொலிசார் என்னை அடித்து உதைத்தனர் என கன்னத்தில் அறைந்துள்ளார் என கூறியுள்ளார்.

நைட்டியோடு ரகளை பண்ண வனிதாவை பங்களாவிலிருந்து துரத்தியடித்த போலீஸ்!!

நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக மதுரவாயிலில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார். ஏற்கனவே விஜயகுமாருக்கு அவருடை மகள், வனிதாவின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை ஒதுக்கு வைத்திருந்தார். தற்போது விஜயகுமார் வனிதா தன்னுடைய வீட்டில் இருந்து கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறி மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், விஜயகுமாருக்கு சொந்தமான பங்களாவில் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜயகுமாரின் மகளூம், நடிகையுமான வனிதா, இந்த பங்களாவை படப்பிடிப்பிற்கு வேண்டும் என்று வாடகை எடுத்துள்ளார். ஆனால், குறித்த நாட்கள் தாண்டியும் பங்களாவை காலி செய்யாமல் இந்த பங்களா தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடினார். இதனால் வனிதா மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த 8 நண்பர்கள் இருந்தனர். இதையடுத்து மதுரவாயல் காவல்நிலையத்தில் விஜயகுமார் புகார் தெரிவித்தார்.

போலீசார் விசாரணையில் இந்த பங்களா, விஜயகுமாரின் இன்னொரு மகளான நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து, நடிகை வனிதாவை பங்களாவை விட்டு வெளியேற்றினர். பங்களாவிற்கு பூட்டுபோட்டு விஜயகுமாரிடம் சாவியை ஒப்படைத்தனர் போலீசார். மேலும் வனிதாவுக்கு ஆதரவாக இருந்த 8 பேரை கைது செய்தனர்.